கவிதைகள்

Tuesday, February 21, 2012

அவள் சொன்னால் .......!

என் இதயத்தை பறித்து எடுத்து விட்டு 
எதுவுமே தெரியாதது போல் இருக்கிறாள் 
அவளின் எண்ணங்கள் எனக்கு புரிகிறது 
தங்க மகள் ,அவள் தாமரை நிறம் - நிலவிலே 
மூங்கிலால் செய்த அவள் மேனி , ஆகா !
அவள் கூந்தலின் மென்மை எந்த பூவிடமும் 
நான் இதுவரை கண்டதில்லை - அவள் 
பார்வை எனை கூர்வாள் கொண்டு 
தாக்கியது போல் உடனே கொன்றுவிடும் 
மாதுளம் பழம் போல் இருக்கும் அவள் கன்னம் 
தேன் சுவை சிந்தும் அவள் உதடு - என் 
வாழ்வில் நான் கண்டிராத புதையல் 
தென்றல் அவளைத் தழுவும் போதும் 
மழையில் அவள் நனைந்திடும் போதும்
நானும் அவைகளாக  மாறவே  எண்ணுவேன் 
ஏனோ தெரியவில்லை அவள் நினைவில் 
நான் கிறுக்குவதெல்லாம் கவிதைதான் 
அவளை நான் காதலிக்கிறேன்......! 
அவள் சொன்னால் , 
காத்திருப்பேன் கடலலை ஓயும் வரை...! 

Saturday, February 18, 2012

அவள் ஓரவிழி பார்வை

அவள் ஓரவிழி பார்வை
என்னைத் தீண்டும் போதுதான்
என் மன பாலையிலும் சில
மழைத்துளிகள் தூறிச் சென்றிருப்பதை
உணர்ந்து கொண்டேன்....!