புனிதராம் யேசுபிரான் பொன்னடிகள் போற்றுகின்ற
எனதினிய நண்பர்கள் எல்லோர்க்கும் எந்தனது
மனதினிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏற்றிடுவீர் !
ஈராயிரத்து பதினொன்று எல்லோர்க்கும்
தீராத் துயர்போக்கும் சிறப்பாண்டாய் மலரட்டும் !
போராயுதம் எல்லாம் போயகல இந்நாடு
சீராய் விளங்கட்டும் செப்புகிறேன் வாழ்த்துக்கள் !!