கவிதைகள்

Wednesday, December 29, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

மனித நேய வாதியென மாநிலத்தில் அவதரித்த 
புனிதராம் யேசுபிரான் பொன்னடிகள் போற்றுகின்ற 
எனதினிய நண்பர்கள்  எல்லோர்க்கும் எந்தனது 
மனதினிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏற்றிடுவீர் !

ஈராயிரத்து பதினொன்று எல்லோர்க்கும் 
தீராத் துயர்போக்கும் சிறப்பாண்டாய் மலரட்டும் !
போராயுதம் எல்லாம் போயகல இந்நாடு 
சீராய் விளங்கட்டும் செப்புகிறேன் வாழ்த்துக்கள் !!

Saturday, December 25, 2010

தள்ளி வைக்கிறேன்.........

பெண்னே !
உன் அழகால் என்னை
கவர்ந்து விட்டாய்
நான்
இப்பொழுது கடிவாளம் பூட்டிய
குதிரையை போல
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
உன் பின்னே நான்
வந்தால்
நீ என்னை பார்க்கும் பார்வை
என் இதயத்தில்
குற்றிவிட்ட காதல் செடி - அதை
நீர்  ஊ ற்றி  வளர்க்கவில்லை
உதிரம் கொண்டு வளர்க்கிறேன்
காதலிப்பது சுகம்
காதலியை கண்டு
காதலை சொல்வதும் சுகம்
காதலி நீ சொல்லும்
பதிலை கேட்பதே கடினம்
என்றஞ்சி
என் காதலை சொல்வதை
தள்ளி வைக்கிறேன் .

Sunday, December 12, 2010

சொல்லாமல் சொல்லி.....

நான் உன்னை நோக்கும் போதும் 
நீ என்னை நோக்கும் போதும்
நம் கண்கள் பேசிக்கொள்கின்றன 
உனக்குள் நான் எனக்குள் நீ என்று
நம் உதடுகள் பேசிக்கொள்கின்றன 
உன்னில் நான் என்னில் நீ என்று
நம் இதயங்கள் பேசிக்கொள்கின்றன 
நமக்குள் என்ன என்று காதல் என்பதை 
சொல்லாமல் சொல்லி .............!

உன்னிடத்தில் கண்டேன்

உலகிலுள்ள அழகு அனைத்தையும் 
உன்னிடத்தில் கண்டேன் 
உலகிலுள்ள அன்பு அனைத்தையும் 
உன்னிடத்தில் கண்டேன் 
உலகிலுள்ள காதல் அனைத்தையும் 
உன்னிடத்தில் கண்டேன் 
இவை அனைத்துமிருக்க உன்னிடத்தில் 
என்னை எப்பொழுது காண்பேன்?


உதடுகள்


உன் உதடுகள் உச்சரிக்கும் வரை 

நான் உணர்ந்ததில்லை 

என்னுடைய பெயர் 

இத்தனை 

அழகாய் இருக்குமெண்டு..!

காதல் சிலிப்பர் கட்டைகள்


என் மனதும் உன் மனதும் 

ரயில் தண்டவாளம் போல் 

அருகருகில் இருந்தாலும் 

என்றும் இணையப் போவதில்லை 

ஆனால் எம்மை காதல் என்னும் 

சிலிப்பர் கட்டைகள் என்றும் 

இணைத்துக் கொண்டே இருக்கும்

துடிக்குதடி


அழகிய மலரெடுத்து உந்தன் குழல் சொருகி 
வண்ண மாலைதனை உந்தன் கழுத்தில் போட்டு 
தங்க வளையல் கொண்டு உந்தன் கைகளில் பூட்டி 
பட்டுச் சேலைதனை கொண்டு 

உந்தன் மேனியில் போர்த்தி 
பந்தலில் வைத்துன்னை தொட்டு

தாலி கட்ட துடிக்குதடி என் கைகள்.

I love You

இரவுத் தூக்கம் போனதடி உன்னால் 
என் இதயத்தூக்கம் போனதடி 
கவிதை கொண்டு உன்னை நான் 
இரசித்து கொண்டு இருந்த வேளை என் 
காதில் நீ சொன்ன வார்த்தை இன்று 
என் உறக்கத்துக்கு வைத்ததடி முற்றுப்புள்ளி 
I LOVE YOU....

தோழியே..........

தோழியே..........
என்னுடன் நீ இருந்த நாட்கள் யாவும் 
இனிமையே....!
ஏனோ , இன்று நீ இருந்தும் நான் 
தனிமையே....! 
உன்னுடைய நட்பிலும் 
காதல் இருந்தது - அனால் 
என்னுடைய நட்பில் 
காதல் மட்டும் தான் இருக்கிறது

முதற் கவிதை

நேரம் வீணாகுதென்று
பேனாவை எடுத்து - நான்
கவி வரைய எண்ணினேன்
அப்பொழுதுதான்........
உன்னைக் கண்டேன்
உடனே!
என் கவிதையாக
உன்னையே வரைந்தேன்
அதுவே என்
முதற்கவிதை.