கவிதைகள்

Monday, June 25, 2012

சொல்வாயா உன் காதல் சம்மதத்தை

சலனமில்லாத பார்வையிலும் உந்தன்
திரண்ட கார்குழல் அசைவினிலும் மயங்கி
அரண் புக துடிக்கின்றேன் உன் மனதினுள்
அறிவாயா பெண்ணே! ஏற்பாயா என்னை !

சந்தன நிறத்தவளே சரஸ்வதியின் குணத்தவளே
வரம் தர மாட்டாயா? உடனிருந்து நான் ரசிக்க,
இருண்ட நிற கூந்தலிலே பூச்சுட நினைக்கின்றேன்
தருவாயா என்னுயிரை , நீ தானே என்னுயிரே

சற்று நேரம் உன்னை நீங்கி நான் நகர்ந்தால்
மரணமே வந்திடும் போல் உணர்கின்றேன்
வரண் வேண்டாம் நீ வந்தால் போதுமே
காப்பாயா என்னை பல நாட்கள் உயிர்வாழ !

சத்தியமாய் சொல்கிறேன் கேள் பெண்ணே
தூரம் சென்றாலும் நான் வருவேன் - உன்னடியில்
தவண்டு வர தவமிருப்பேன் , எனக்காக நீ வந்து
சொல்வாயா ஒருவார்த்தை உன் காதல் சம்மதத்தை. 

Monday, June 11, 2012

நம்பவில்லை

பெண்ணே !
உன் அழகினை
கண்டு ரசித்த என் கண்கள்
உனக்காக கண்ணீர் சிந்துவதற்கு
சிந்திக்கின்றன ! காரணம்
நீ என்னை வெறுத்திருப்பாய்
என்று அவை நம்பவில்லை 

நியாயமா?

என் தலைவியாக
உன்னை எண்ணினேன்
அனால் நீ
என் தலைவிதியை
மாற்றிச் சென்றுவிட்டாயே
நியாயமா?

உன்னை எதிர்த்து

உன்னை எதிர்த்து
ஆயிரம் கவிதை எழுத எண்ணுகிறேன்
என் பேனா முனை தயங்குகிறது
உன்னை எதிர்த்து கவி வரைய
அவைகளுக்குள் ஓர் துடிப்பு

Tuesday, June 5, 2012

முற்றுப்புள்ளி

ஏனோ !
என் மனப்பாலையிலும்
சில நீர்த்துளிகளை சிந்தி
சென்றிருக்கிறாய் பெண்ணே
நீயின்றி என் பகலும் இரவுதனடி
இருந்தும்
உன் நினைவுகள் என்னுள்
மின்மினி பூச்சியாய்
வெளிச்சம் கட்டுகிறது
உன்னை கண்ட முதல் நாள்
நான் எடுத்த முடிவு எனக்கு
இன்று
முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

ஓர் துடிப்பு!

உன்னை எண்ணி
ஆயிரம் கவிதை எழுத எண்ணுகின்றேன்
என் பேனா முனைகள் தயங்குகின்றன
உன்னை எதிர்த்து கவி வரைய
அவைகளுக்கும் ஓர் துடிப்பு!

முறையிடப் போகிறேன் ...!

காதலிப்பது தவறா ?
அல்லது
உன் போன்ற பெண்ணை
காதலித்தது தவறா ?
குற்றமின்றி தண்டனை பெறுவது
மரண வேதனை !
பெண்மை என்பதை உன்னிடத்தில்
கண்டேன் பெண்ணே,
உன் மனதை வன்மையாக
வைத்திருக்கிறாயே !
உன்னிடம் காதலுரைத்தேன்
உன் பதிலில் எனக்கு
ஈடுபாடில்லை,
என் மரணத்தை வைத்து
இறைவனிடம் முறையிடப் போகிறேன் ...!

Monday, June 4, 2012

மௌனங்கள்

சில பொழுதுகளில் ,
உன் வதனப் புன்னகையை
நினைத்து பார்க்கையில்
கவி வரைய தோன்றுகிறது
என் இதயம் கரைத்து
எழுதும் வார்த்தைகளை - உன்
மௌனங்கள் படிக்க மறுப்பது ஏன்?