கவிதைகள்

Saturday, June 10, 2017

புரியும் நாள் விரைவில் வரும்


விலகிச் சென்றால்
இப்படி ஒரு வலி இருக்கும் என்று
தெரிந்திருந்தால்,
நீ என்னை நெருங்கும் போது
உன்னை அணைத்திருக்க மாட்டேன்,
நீ தந்த இன்பங்கள்
என்னை துன்பப்படுத்தும் என்று
நினைத்துகூட பார்க்கவில்லை
ஏன் இப்படி ?
நீ மட்டும் தான் இப்படியா ?
இல்லை,
எல்லா பொண்ணுங்களுமே இப்படியா ?
ஊருக்கெல்லாம் சொல்லிவிட்டேன்
நீ தான் என் ஆள் என்று
இப்ப என்ன செய்வேன் ?
நீ இன்றி நான் இல்லை என்றிருந்தேன்
என்னை ஒழிப்பதற்கா இப்படி செய்தாய் ?
அது மட்டும் நடக்காது
என்னை இழந்ததற்காக நீ வருத்தப்படுவாய் !
உன்னை எண்ணி இனி நான் இல்லை
என் வாழ்வு விரக்தி ஆனது உன்னால் தான்
விதி என்று விட்டுவிடுகிறேன்
இனியாவது என்னுமொருவனை
என்னைப்போல் ஆக்காதே !
ஏன் என்னை வெறுத்தாய் என்று
காரணம் கேட்கவில்லை
காரணம் இன்றி ஏன் வெறுத்தாய்
என்றுதான் கேட்கின்றேன் ,
ஒன்று மட்டும் உண்மை
காரணம் இன்றி எதுவுமில்லை
சில காரணம் கடைசிவரை புரிவதில்லை.
நீ என்னை புரிந்து கொள்ளும் நாள்
விரைவில் வரும்.....

உண்மைதான்


கல்லில் ஒரு சிற்பம்
ஒளிந்திருப்பது உண்மைதான்
ஆனால் !
நல்ல சிற்பி அதை காணும்வரை
அது வெறும் கல்தான்.
சொல்லில் ஒரு கவிதை
ஒளிந்திருப்பது உண்மைதான்
அனால் !
நல்ல கவிஞன் அதை கிறுக்கும் வரை
அது வெறும் சொல் தான்.
முள்ளில் ஒரு வலி
ஒளிந்து இருப்பது உண்மைதான்
ஆனால் !
நல்ல கால் அதை மிதிக்கும் வரை
அது வெறும் முள் தான்.

இப்படித்தான் இதயமும்
நல்ல காதல் வரும் வரை
அது வெறும் தசை தான்.

காதல்……!


ஆண் மனதை பெண்ணும்
பெண் மனதை ஆணும்
மாறி மாறி வதைப்பது தான்
காதல்……!

போராட்டம்


இறைவா !
ஏன் இவள் போன்ற மலரினை
பூமியில் படைத்தாய்?
நான் எத்தனை வண்டுகளுடன்
போரிடுவது....?

வாழ்க்கை


வாழ்க்கையில்,
ஏய்ப்புக்களும் ஏமாற்றங்களும்
வேதனையை தராது
மாறாக அவை
வாழ்வியலை கற்றுத்தரும்.