விலகிச் சென்றால்
இப்படி ஒரு வலி
இருக்கும் என்று
தெரிந்திருந்தால்,
நீ என்னை நெருங்கும்
போது
உன்னை அணைத்திருக்க
மாட்டேன்,
நீ தந்த இன்பங்கள்
என்னை
துன்பப்படுத்தும் என்று
நினைத்துகூட
பார்க்கவில்லை
ஏன் இப்படி ?
நீ மட்டும் தான்
இப்படியா ?
இல்லை,
எல்லா பொண்ணுங்களுமே
இப்படியா ?
ஊருக்கெல்லாம்
சொல்லிவிட்டேன்
நீ தான் என் ஆள்
என்று
இப்ப என்ன செய்வேன் ?
நீ இன்றி நான் இல்லை
என்றிருந்தேன்
என்னை ஒழிப்பதற்கா
இப்படி செய்தாய் ?
அது மட்டும் நடக்காது
என்னை இழந்ததற்காக நீ
வருத்தப்படுவாய் !
உன்னை எண்ணி இனி நான்
இல்லை
என் வாழ்வு விரக்தி
ஆனது உன்னால் தான்
விதி என்று விட்டுவிடுகிறேன்
இனியாவது
என்னுமொருவனை
என்னைப்போல் ஆக்காதே
!
ஏன் என்னை வெறுத்தாய்
என்று
காரணம் கேட்கவில்லை
காரணம் இன்றி ஏன்
வெறுத்தாய்
என்றுதான்
கேட்கின்றேன் ,
ஒன்று மட்டும் உண்மை
காரணம் இன்றி
எதுவுமில்லை
சில காரணம் கடைசிவரை
புரிவதில்லை.
நீ என்னை புரிந்து
கொள்ளும் நாள்
விரைவில் வரும்.....
No comments:
Post a Comment