கல்லில் ஒரு சிற்பம்
ஒளிந்திருப்பது
உண்மைதான்
ஆனால் !
நல்ல சிற்பி அதை
காணும்வரை
அது வெறும் கல்தான்.
சொல்லில் ஒரு கவிதை
ஒளிந்திருப்பது
உண்மைதான்
அனால் !
நல்ல கவிஞன் அதை
கிறுக்கும் வரை
அது வெறும் சொல்
தான்.
முள்ளில் ஒரு வலி
ஒளிந்து இருப்பது
உண்மைதான்
ஆனால் !
நல்ல கால் அதை
மிதிக்கும் வரை
அது வெறும் முள்
தான்.
இப்படித்தான் இதயமும்
நல்ல காதல் வரும் வரை
அது வெறும் தசை தான்.
No comments:
Post a Comment